மகளின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட பவன் கல்யாண்

Bookmark and Share

மகளின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட பவன் கல்யாண்

மெகா சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணும் அவருடைய முன்னாள் மனைவி ரேணுவும் இணைந்து சமீபத்தில் இவர்களுடைய மகள் ஆதியாவுடைய பள்ளி விழாவில் கலந்து கொண்டார்கள்.

காதலர்களாக இருந்து பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் பவன் கல்யாணும், ரேணுவும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் இருந்தது.

ஆனால் திடீரென இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் விவாகரத்து வாங்கிக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக பிரிந்துவிட்டனர். குழந்தை ஆதியா தாயுடன் வளர்ந்து வந்தார்.

சமீபத்தில் ஆதியா படித்துக் கொண்டிருக்கும் பள்ளியில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது, இதில் அனைத்து குழந்தையும் அவர்களுடைய பெற்றோர்களுடன் வந்திருந்தனர், இதில் ஆச்சர்யம் என்னவென்றால் திடீரென இந்த விழாவில் பவன் கல்யாணும் கலந்து கொண்டாராம், இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ரேணு, ஆனந்த கண்ணீரில் திளைத்தார்.

இது குறித்து அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறுகையில் “நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் என் மகளின் நடனத்தை தாயாகிய நான் மட்டும்தான் பார்ப்பேன் என்று நினைத்தேன் ஆனால் என் மகள், அவளுடைய அப்பா முன் என்னைவிட மிகவும் அற்புதமாக மேடையில் ஆடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

அவ்வப்போது பவன் கல்யாண் அவருடைய மகளை மும்பையில் சந்தித்து பேசினாலும் இந்த நிகழ்வை டோலிவுட்டே மிகவும் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில்தான் இவருடைய படமான கோபாலா கோபாலா என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions