பவன் கல்யாணின் இளகிய மனது!

Bookmark and Share

பவன் கல்யாணின் இளகிய மனது!

சினிமா பிரபலங்கள் திடீரென்று தங்களது ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதுண்டு. சில சமயங்களில் தீவிர ரசிகர்கள் உடல் நலம் இல்லாத போது அவர்களுக்கு உதவிகளையும் செய்வதுண்டு.

12 வயதான ஸ்ரீஜா என்ற சிறுமி பிரபல ஹீரோவான பவன் கல்யாணின் தீவிர ரசிகையாவார். அவர்  நரம்பியல் தொடர்பான நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்த செய்தியை மேக் எ விஷ் பௌன்டேஷன் மூலமாக தெரிந்த பவன் கல்யாண் அந்த சிறுமியை சந்திக்க முடிவு செய்தார்.

அதனை அடுத்து அவர் ஸ்ரீஜா சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்த மருத்துவமனைக்கே நேராக சென்று அந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். என்ன மாயமோ அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

தற்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவருடைய மருத்துவ செலவுக்காக ரூ 2 லட்சத்தை பவன் கல்யாண் வழங்கி உள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீஜா தனது குடும்பத்தோடு நடிகர் பவன் கல்யாணின் வீட்டிற்கு சென்று சுமார் இரண்டு மணி நேரம் சந்தோசமாக நேரத்தை கழித்திருக்கிறார். பவன் கல்யாணுக்கு தனது நன்றியை தெரிவித்து விட்டு வந்திருக்கின்றனர்.

 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions