பாரம்பரியத்தை மதிக்கும் பவன் கல்யாண்

Bookmark and Share

பாரம்பரியத்தை மதிக்கும் பவன் கல்யாண்

பிரபல மூத்த நடிகரான மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் தனது நீண்ட நாள் காதலியான ப்ரணதி ரெட்டியை கடந்த 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த பிரம்மாண்டமான திருமண விழாவில் ஆந்திர மற்றும் தெலுங்கான முதல்வர்களான சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மோகன் பாபுவின் நெருங்கிய நண்பரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, சூர்யா மற்றும் பல பிரபலங்கள்  திருமண விழாவில் கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.

இதில் கலந்து கொண்ட மற்றொரு பிரபல நடிகரான பவன் கல்யாண் மேடையில் ஏறுவதற்கு முன்பாகவே தனது காலணிகளை கழட்டிவிட்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்.

அவர் தனது பாரம்பரியத்தையும், சபை மரியாதையையும் நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார் என்று பலரும் கூறினர். இதில் என்ன விசேஷம் என்னவெனில் இது போன்று வேறு எந்த வி ஐ பிக்கும் தோன்றவில்லை என்பதுதான்.

சில பிரபலங்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன்களால் அவ்விதம் செய்ய முடியாமல் போயிருக்கும் என்றும் சிலர் கூறினர். எப்படியோ தனது நல்ல நடவடிக்கையால் ரியல் ஹீரோவானார் நம்ம பவன் கல்யாண்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions