நடிகர் பவன் கல்யாண் வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர்கள்

Bookmark and Share

நடிகர் பவன் கல்யாண் வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர்கள்

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாண் வீடு ஐதராபாத் நகரம் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் 12–ம் எண் சாலையில் உள்ள எம்.எல்.ஏ. காலனியில் உள்ளது.

நேற்று முன்தினம் 3 மர்ம வாலிபர்கள் பவன் கல்யாண் வீட்டுக்கு வந்தனர். வாசல் முன் நின்ற காவலாளியிடம், ‘‘நாங்கள் பவன் கல்யாண் ரசிகர்கள். அவரை சந்திக்க வேண்டும். பலமுறை முயற்சி செய்தும் அவரை பார்க்க முடியவில்லை’’ என்றனர்.

ஆனால் காவலாளி அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த 3 பேரும் காவலாளியை தாக்கி வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டின் 2–வது மாடி வரை சென்று விட்டனர். அங்கிருந்த வேலைக்காரர் ஜதாங்கீர் அவர்களை தடுத்தார். பவன்கல்யாண் இங்கு இல்லை. ‘சர்தார்’ படப்பிடிப்புக்காக குஜராத் சென்று உள்ளார் என்றார்.

ஆனால் அவரையும் 3 பேர் தாக்கினர். முகத்தில் ஓங்கி குத்தியதில் வேலைக்காரரின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பயந்து போன 3 பேரும் வீட்டில் இருந்து வெளியேறி தப்பி விட்டனர்.

இதுகுறித்து ஜதாங்கீர் பஞ்சா, ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions