கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்புகள் துவக்கம்

Bookmark and Share

கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்புகள் துவக்கம்

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முதல் துவங்கியுள்ளன. நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் பாபி இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிக்க உள்ளார். புனேவில் துவங்கிய இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்புகள் தொடர்ந்து ஜூன் ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இப்படத்தில் வில்லன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகளில் பவன் கல்யாண் கலந்து கொள்ளவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கவுள்ளார்.  

கபார் சிங் 2 படம் 2016 சங்கராந்தி பண்டிகைக்கு வெளிவரும் என்று கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions