பள்ளி நோட்டுகளில் ஆபாசப் புகைப்படங்கள்...!

Bookmark and Share

பள்ளி நோட்டுகளில் ஆபாசப் புகைப்படங்கள்...!

நடிகைகளின் புகைப்படங்களை எதில் எதில்தான் இடம் பெறச் செய்வது என்பதில் ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. பல சமயங்களில் சம்பந்தமே இல்லாமல் பல விற்பனைப் பொருட்களில் அவர்களது புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது.

சமீபத்தில்தான் சர்ச்சைக்குரிய விளம்பரங்களில் நடிகர்கள், நடிகைகள் நடிப்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி நோட்டுப் புத்தகங்களில் நடிகைகளின் 'கிளீவேஜ்' தெரியுமளவிற்கு ஆபாசமான புகைப்படங்கள் சில நோட்டுப் புத்தகங்களில் இடம் பெற்றதைப் பார்த்து நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியான நடிகை ரேணு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 9வது படிக்கும் அவருடைய உறவினர் பள்ளியில்தான் இப்படிப்பட்ட நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்துள்ளாராம்.

இந்த விஷயம் குறித்து ரேணு, அந்தப் பள்ளியின் முதல்வரிடம் சென்று முறையிட்ட போது அவர் தெரிவித்த பதில் இன்னும் அதிர்ச்சியடைய வைத்ததாம். இதை விட மோசனமான விஷயங்களை மாணவர்கள் டிவியில் பார்த்து விடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்த அதிர்ச்சியை அவருடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார் ரேணு. விளம்பரங்களுக்கு கேள்வி வந்தது போல இதற்கும் சமூக ஆர்வலர்கள் யாராவது கேள்வி எழுப்பினால்தான் பிரச்சனை முடிவுக்கு வரும் போலிருக்கிறது.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை
இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions