பவன் கல்யாணுடன் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

பவன் கல்யாணுடன் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்

அஜித் நடித்த ‘வாலி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து ‘குஷி’ என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்தும், இந்தியில் பார்தீன் கானை வைத்தும் இயக்கினார்.

இதில் பவன் கல்யாண் நடித்த குஷி படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு தமிழில் கவனம் செலுத்திய எஸ்.ஜே.சூர்யா சிறிது இடைவெளியில், மீண்டும் பவன் கல்யாணை வைத்து ‘புலி’ என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2010ம் ஆண்டு வெளியானது.

தற்போது மீண்டும் பவன் கல்யாணை வைத்து படம் இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. இவர்கள் கூட்டணியில் புதிதாக உருவாக இருக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இது ‘குஷி’ படத்தின் 2ம் பாகம் என்று கூறப்படுகிறது. இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேடிவந்த நிலையில், தற்போது ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் ‘கப்பர் சிங்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது


Post your comment





Related News
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions