பாயும் புலி ஆடியோ வெளியீட்டில் அப்துல் கலாமுக்கு மரியாதை

Bookmark and Share

பாயும் புலி ஆடியோ வெளியீட்டில் அப்துல் கலாமுக்கு மரியாதை

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் விஷால், சூரி, ஜே.கே.ரித்தீஷ், மனோபாலா, நடிகை காஜல் அகர்வால், தயாரிப்பாளர் பாரிவேந்தர், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

இந்த இசை வெளியீட்டு விழாவில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். 

பின்னர், விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பூங்கொத்துக்கு பதிலாக அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், ‘பாயும் புலி’ படத்தின் செலவுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையில் மிச்சமான பணத்தில் 2 பெண்களுக்கு கல்வி உதவித் தொகையை தயாரிப்பாளர் பாரிவேந்தரும், நடிகர் விஷாலும் இணைந்து கொடுத்தனர். 

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் நீண்ட கால கனவான அனைவருக்கும் கல்வி என்பதை போற்றும் வகையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘பாயும் புலி’ படக்குழுவினர் இந்த உதவிகளை செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions