பாயும் புலி படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீடு

Bookmark and Share

பாயும் புலி படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள பாயும் புலி திரைப்படம் தெலுங்கில் ஜெயசூர்யா என்ற பெயரில் திரைக்கு வரவுள்ளது. நேற்று ஹைதராபாத்தில் ஜெயசூர்யா படப் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர்கள் ஆர்யா,கார்த்தி,நானி,கோபி சந்த் இயக்குநர் கொரடலா சிவா, நடிகை குஷ்பு, நடிகை மது ஷாலினி போன்ற பிரபலங்களுடன் விஷால்,காஜல் அகர்வால்,சூரி,இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.   தனது அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்த நானி,கோபி சந்த் இயக்குநர் கொரடலா சிவா,ஆர்யா கார்த்தி எல்லோருக்கும் விஷால் நன்றி தெரிவித்தார்.

மேலும் பெண் கல்விக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்யுமாறு விழாவில் கலந்துகொண்ட அனைவரிடமும் விஷால் வேண்டுகோள் விடுத்தார். சுசீந்திரன் இயக்கத்தில் இரண்டாவதாக தான் நடிக்கும் இப்படம் மாறுபட்ட கதையம்சம் கொண்ட போலீஸ் கதை என்றும் செப்படம்பர் 4 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.  

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷாலுடன் இப்படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்த்தாகவும் இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநருக்கு தனது நன்றியையும் காஜல் தெரிவித்துக் கொண்டார்.

தனது திரை உலக வாழ்க்கையில் முக்கிய படமாக இப்படம் அமையும் என்றும் காஜல் நம்பிக்கை தெரிவித்தார்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions