ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்: 3 அணிகள் மோதல்

Bookmark and Share

ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்: 3 அணிகள் மோதல்

நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் முன்பு அந்த நிர்வாகத்தின் மீது எதிர் அணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினர். கோர்ட்டு உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் அந்த தேர்தல் நடந்தது.

அது போல் தென் இந்திய ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகத்துக்கு எதிராகவும் பல்வேறு குறைகள் கூறப்படுகின்றன. இந்த தேர்தலை ஜனவரி 10–ந் தேதி நடத்தும்படி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் நிர்வாகத்தை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 3 அணிகள் மோதுகின்றன. பி.சி.ஸ்ரீராம் தலைமையில் போட்டியிடும் அணிக்கு நடுநிலை அணி என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் தலைவர் பதவிக்கு ஸ்ரீராம் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு கே.கண்ணன், பொருளாளர் பதவிக்கு ராம்நாத் ரெட்டி போட்டியிடுகிறார்கள். இந்த அணி சார்பில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு உள்பட பலர் களத்தில் நிற்கிறார்கள்.

இது தவிர பெப்சி தலைவர் சிவா தலைமையில் ஒரு அணியும், ஒளிப்பதிவாளர் கன்னியப்பன் தலைமையில் மற்றொரு அணியும் மோதுகின்றன. தேர்தல் குறித்து பேசிய ஸ்ரீராம் அணியை சேர்ந்த நடிகர் இளவரசு, ‘ஒளிப்பதிவாளர் சங்கத்தின் வரவு செலவு முறையாக பராமரிக்கப்பட வில்லை, 8 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை என்பது உள்பட பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் கோர்ட்டு மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது.

எங்கள் அணிதான் இந்த தேர்தலில் வெற்றி பெறும். அதன் பிறகு தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் சங்கத்தில் 1200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஜனவரி 10–ந் தேதி நடைபெறும் தேர்தலில், 912 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணையும் இந்திய பிரபலம்!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பி.சி.ஸ்ரீராம்!
நாளை ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்
தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் பி.சி.ஸ்ரீராம்!
நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்..!
தேர்தல் களத்தில் இறங்கும் பி.சி.ஸ்ரீராம்?
எம்.எஸ்.விக்கு சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலி
ஐ படம் மூலம் அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளேன்: பி.சி.ஸ்ரீராம்
படம் இயக்குவதை கைவிட்டார் பி.சி.ஸ்ரீராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions