பேய்கள் ஜாக்கிரதை படத்தில் பெயர் வரிசையை மாற்றச் சொன்ன கபிலன்வைரமுத்து!

Bookmark and Share

பேய்கள் ஜாக்கிரதை படத்தில் பெயர் வரிசையை மாற்றச் சொன்ன கபிலன்வைரமுத்து!

ஸ்ரீசாய் சர்வேஷ் தயாரித்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை. புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வருகிறது. இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கண்மணி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். விவேகா ஒரு பாடலையும் கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள். 

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அதில் பாடலாசிரியர் வரிசையில் முதலில் கபிலன்வைரமுத்துவின் பெயரும் இரண்டாவதாக விவேகாவின் பெயரும் அச்சாகியிருந்தது. படத்தில் அதிகப்படியான பாடல்களை கபிலன் எழுதியிருப்பதால் அவர் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. 

இதைப் பார்த்துவிட்டு கபிலன்வைரமுத்து இயக்குநரை அழைத்திருக்கிறார். “போஸ்டர்ல விவேகா பேர இரண்டாவதா போட்டிருக்கீங்க. அவர்தான் சீனியர். அவர் பேர்தான் முதல இருக்கணும். தயவு செய்து மாத்தீருங்க” என்று கேட்டிருக்கிறார். அதன்படி அனைத்து போஸ்டர்களிலும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரனும் தம்பி ராமையாவும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார்.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions