ஸ்ரீதிவ்யாவின் பள்ளிப்பருவத்தை நினைவுபடுத்திய பென்சில்!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவின் பள்ளிப்பருவத்தை நினைவுபடுத்திய பென்சில்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த முதல் படம் பென்சில். ஆனால் பைனான்ஸ் பிரச்சினையால் இந்த படம் கிடப்பில் கிடந்ததால், அதையடுத்து டார்லிங் படத்தில் நடித்தார்.

அதனால் அந்த இரண்டாவது படமே அவருக்கு முதல் படமாக வெளியானது. இந்த நிலையில், மூன்றாவது படமாக த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்போது அவர் நடித்த முதல் படமான பென்சில் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் பள்ளி மாணவனாக நடித்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் எப்படி இந்த படத்தில் நடித்தபோது தனது பள்ளிப்பருவம் மனதில் நிழலாடியது என்று கூறி வந்தாரோ, அதேபோல் இப்போது ஸ்ரீதிவ்யாவும் கூறி வருகிறார்.

அதாவது, இந்த படத்தில் பள்ளி சீருடை அணிந்து நடித்த ஒவ்வொரு நாட்களுமே நான் பள்ளிக்கூடம் சென்றபோது நடந்த பசுமையான சம்பவங்கள் என் மனதில் தோன்றியது.

அதோடு, ஒருநாள் ஒரு மாணவனிடம் நான் கைகலப்பு செய்தபோது, அவன் தன் கையில் வைத்திருந்த பென்சிலால் என் கையில் குத்தி விட்டான். அதனால் ரத்தம் வழிந்தது.

நான் வலியால் துடித்தேன். அதனால் இந்த படத்தின் டைட்டில் பென்சில் என்று ஒவ்வொரு முறை சொல்லும்போதும், அந்த சம்பவம் என் மனதில் குபுக்கென்று வந்து நிற்கும் என்கிறார் ஸ்ரீதிவ்யா.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions