முதன்முதலாக சம்பளம் வாங்கி நடித்த டைரக்டர் பேரரசு!

Bookmark and Share

முதன்முதலாக சம்பளம் வாங்கி நடித்த டைரக்டர் பேரரசு!

டைரக்டர் பேரரசு தான் இயக்கிய சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் மற்றவர்களின் படங்களில் நடித்ததில்லை. இந்த நிலையில், ரு படத்தில் அவரை நடிக்க அழைத்த போது, மற்றவர்களின் படங்களில் நடிக்கும் ஐடியா இல்லையே என்று யோசித்தாராம்.

அப்போது நீங்கள் இந்த படத்திலும் டைரக்டர் பேரரசுவாகவேத்தான் நடிக்கிறீர்கள் என்று அப்பட டைரக்டர் சொன்னதை அடுத்து கதை கேட்டாராம் பேரரசு. அப்போது அவருக்கான கேரக்டர் திருப்தியாக இருந்ததால் நடிக்க ஓகே சொன்னாராம்.

மேலும், மொத்தம் 6 நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்த பேரரசு முதல் நாள் ஸ்பாட்டுக்கு சென்றபோது அவரை சக நடிகராக நினைக்காமல் டைரக்டர் என்று அனைவருமே ஒதுங்கியே நின்றார்களாம்.

அதையடுத்து, இந்த படத்தைப் பொறுத்தவரை நானும் ஒரு நடிகன்தான். அதனால் என்னையும் சக நடிகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் தன்னையும் இணைத்துக்கொண்டாராம் பேரரசு.

அப்போது அவர்கள் குசுகுசுவென்று பேசுவதை காதுகளை தீட்டிக்கேட்ட பேரரசுவிற்கு ஒரு விசயம் புரிந்ததாம். அதாவது அவர்களெல்லாம் மற்ற டைரக்டர்களின் படங்களில் நடித்தபோது நடந்த சில நல்ல மற்றும் தவறான விசயங்களை சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்களாம்.

அதைக்கேட்ட பிறகுதான், இப்படித்தான் நம் படங்களில் நடிப்பவர்களும் மற்ற படங்களில் நடிக்கும்போது அங்கு நடந்த விசயங்களை பற்றி பேசி சிரித்திருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டாராம் பேரரசு.

மேலும், இதுவரை தான் இயக்கிய படங்களிலேயே நடித்ததால் அதற்கென்று தனிப்பட்ட சம்பளம் வாங்கியதில்லையாம் பேரரசு. அந்த வகையில், இந்த ரு படத்திற்காகத்தான் நடித்ததற்காக முதன்முதலாக அவர் சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.

 


Post your comment





Related News
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்யின் அடுத்த படம் பற்றி பரவிய செய்தி! தளபதி தரப்பு கொடுத்த விளக்கம்
விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி
திருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை அழித்துக்கொண்ட பேரரசு
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது: இயக்குனர் பேரரசு
விஜய்யின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் சுந்தர் சி!
இளைய தளபதிக்காக காத்திருக்கும் பேரரசு!
பேரரசுக்கு எஸ்.பி.முத்துராமன் சொன்ன அறிவுரை!
எஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions