இளைய தளபதிக்காக காத்திருக்கும் பேரரசு!

Bookmark and Share

இளைய தளபதிக்காக காத்திருக்கும் பேரரசு!

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கியவர் பேரரசு. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகின. அதையடுத்து திருப்பதி, தர்மபுரி, திருவண்ணாமலை, பழனி, திருத்தணி, திகார் ஆகிய படங்களை இயக்கினார். இதில் பரத் நடித்த திருத்தணி படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியதால் திரைக்கு வரவே சில வருடங்கள் ஆகியது.

அதையடுத்து தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் மலையாளத்துக்கு சென்று திகார் படத்தை இயக்கிய பேரரசு, அதை தமிழிலும் வெளியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.அதனால் அதையடுத்து வளர்ந்து வரும் ஹீரோக்களை வைத்து படம் இயக்க வாய்ப்புகள் கிடைத்தும் அவர் ஏற்கவில்லை.

மீண்டும் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். அதற்கு விஜய்யும் சீக்கிரமே நல்ல பதில் சொல்வதாக கூறியிருக்கிறாராம்.

இந்நிலையில், அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதனுக்கு மீண்டும் விஜய் வாய்ப்புக்கொடுத்திருப்பதால், தனக்கும் விஜய் படம் இயக்கும் வாய்ப்பு கொடுப்பார் என்கிற நம்பிக்கை பேரரசுவுக்கு இப்போது இன்னும் அதிகரித்திருக்கிறதாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions