இயக்குனராகும் பீட்டர் ஹெய்ன்...!

Bookmark and Share

இயக்குனராகும் பீட்டர் ஹெய்ன்...!

தென்னிந்தியத் திரையுலகில் பல ஹிட்டான படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் பீட்டர் ஹெய்ன். தற்போது தமிழ்ப் படங்களில் அவர் அதிகமாக பணி புரிவதில்லை.

தெலுங்குப் படங்களில்தான் அதிகமாக ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து வருகிறார். அதோடு ஹிந்தி, மலையாளப் படங்களுக்கும் கூட ஸ்டண்ட் அமைத்திருக்கிறார்.

தமிழில் “ரன், காக்க காக்க, திருமலை, அன்னியன், சிவாஜி, ராவணன், எந்திரன், கோ, மாற்றான்” உள்ளிட்ட பல படங்களில் அவர் அமைத்த ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் பாராட்டப்பட்டவை.

ராஜமௌலி இயக்கிய 'மகதீரா' படத்தில் அவர் அமைத்த சிறப்பான சண்டைக் காட்சிகள் அவரை தெலுங்குத் திரையுலகில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. தற்போது ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி' படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

தமிழில் 'கோச்சடையான்' படம் தவிர கடந்த மூன்று வருடங்களாக சில சங்கங்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ்ப் படங்களில் பணி புரிய தடை விதித்துள்ளார்கள் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியட்நாம் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிக்கு குடியேறியவரான பீட்டர் ஹெய்ன், விரைவில் வியட்நாம் மொழிப் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம்.  கடந்த சில வருடங்களாகவே இயக்கத்தையும் கற்று வந்ததாகவும், பல பெரிய இயக்குனர்களுடன் பணி புரிந்ததால் நல்ல அனுபவம் கிடைத்துள்ளதாகவும் பீட்டர் ஹெய்ன் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions