அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்

Bookmark and Share

அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா நடித்த பேட்ட படம் கடந்த 10-ந் தேதி வெளியானது. படம் ரிலீசான சில மணி நேரங்களில் இணையதளத்திலும் வெளியானது.

இந்த நிலையில் கரூரில் இருந்து சென்னை சென்ற தமிழக அரசு பேருந்து ஒன்றில் பேட்ட படம் திருட்டுத்தனமாக ஒளிபரப்பானது. இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள் அது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.ரஜினி ரசிகர்களின் புகார் டுவீட்டை பார்த்த விஷால் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-

‘பைரசி தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அரசு பேருந்துகளில் திருட்டு டிவிடிகள் மூலம் படம் காண்பிக்கப்படுவதற்கான ஆதாரம் இதோ உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய அரசு பேருந்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி
பேட்ட டிரைலரை புத்தாண்டில் வெளியிட படக்குழு திட்டம்
பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதல் - தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions