சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்

Bookmark and Share

சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்

பொங்கலுக்கு ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்‘ படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றி படங்கள் என அறிவிக்கப்பட்டாலும் எந்தப் படத்தின் வசூல் அதிகம் என ரசிகர்களிடையே போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் இரண்டு படத்தின் தயாரிப்பு தரப்புமே வசூல் விவரங்களை வைத்து போட்டி போட ஆரம்பித்துவிட்டன.

தற்போது இது குறித்து ‘பேட்ட’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கருத்து தெரிவித்துள்ளார். “எந்த ஓட்டலிலாவது வெளியே இன்று ஆயிரம் இட்லி விற்கப்பட்டது என்று அறிவிப்புப் பலகை வைத்துள் ளார்களா? இல்லையே. உணவு நன்றாக இருக்கிறதா, இல்லையா அது போதும்.

அதே போலத்தான் திரைப்படங்களும். படம் பிடித்திருக்கிறதா இல்லையா, நன்றாக இருக்கிறதா, சென்று பார்ப்போம். இப்படி வசூலை வைத்துப் பேசுவது தேவையில்லாத வணிகமயமாக்கல்.

இப்படி வசூல் நிலவரங் களை பற்றிப் பேசுவதெல்லாம் சில பேருக்கு தொழில். இப்படியான தகவல்களைப் போட்டு ட்ராக்கர்ஸ் என்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions