பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை

Bookmark and Share

பாகிஸ்தானில் பான்டோம் படத்திற்கு தடை

கபீர் கான் இயக்கத்தில் சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடித்துள்ள படம் பான்டோம் . வருகிற 28ந் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளிவருகிறது.  

2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப் படத்தை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது என்று மும்பை தாக்குதலில் தொடர்புடையவராக கருதப்படும் ஜமாத் உத்தவா தலைவர் ஹபீஸ் சயீத் லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

"தன்னையும், தன் இயக்கத்தையும் பான்டோம் படம் தவறாக சித்தரிப்பதாகவும், இதனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால் படத்தை தடைசெய்ய வேண்டும்" என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.  

வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் விளக்கம் கேட்டது. இப்படத்தை பாகிஸ்தானில் திரையிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அது விளக்கம் அளித்தது.  

தொடர்ந்து படத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கு தடை விதித்ததோடு திருட்டு வி.சி.டியில் படம் பார்ப்பதையும் அரசு தடுக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions