பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்

Bookmark and Share

பான்டோம் படம் முதல்நாளிலேயே ரூ. 8 கோடி வசூல்

பாக்ஸ் ஆபிசில் பஜ்ரங்கி பைஜான் படம் சாதனை நிகழ்த்தியதை தொடர்ந்து அதே இயக்குநர் கபீர் கானின் இயக்கத்தில் உருவாகியுள்ள பான்டோம் படமும், வசூலில் சாதனை புரிந்துள்ளது.

கபீர் கான் இயக்கத்தில், சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள பான்டோம் படம், வெளியான முதல்நாளிலேயே ரூ. 8.46 கோடி வசூல் செய்துள்ளது. மும்பை, டில்லி, பெங்களூரு நகரங்களில், படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சயீப் அலி கான் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த ஹாப்பி எண்டிங் படம், முதல்நாளில் ரூ. 4 கோடி வசூல் செய்திருந்த நிலையில், பான்டோம் படம், ரூ. 8 கோடி அளவிற்கு வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது, பாராட்டிற்குரியது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions