பிச்சைக்காரன் நிச்சயம் வெற்றி பெறுவான், விஜய் ஆண்டனி

Bookmark and Share

பிச்சைக்காரன் நிச்சயம் வெற்றி பெறுவான், விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி தனக்கேற்ற கதையை தேர்ந்து எடுத்து நடிப்பதோடு படத்தின் தலைப்பையும் அனைவரையும் ஈர்க்கும் வித்தில் வைக்க்கூடியவர்.

அவர் தற்போது நடித்து , இசை அமைத்து வரும் புதிய படமான பிச்சைகாரன் கூட அவ்விதமே பாராட்டப்படுகிறது. பிச்சைக்காரன் படத்தை பற்றி விஜய் ஆண்டனி  “நம் ஒவ்வொருக்குள்ளும் ஒரு பிச்சைக்காரன் ஒளிந்து இருக்கிறான். பிச்சையின் தன்மை தான் வேறுபடுகிறது.

இயக்குனர் சசியை சந்தர்ப்ப வசமாக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முறை சந்திக்க நேரிட்டது.அவருடன் நான் ஏற்கனவே டிஷ்யூம் படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளேன்.அவருடைய இயக்கத்தில் வெளி வந்த சொல்லாமலே , ரோஜா கூட்டம் , டிஷ்யூம்,பூ , 555 படங்களின் மூலம் என்னை மிகவும் கவர்ந்த இயக்குனர் ஆவார் சசி.

அவருடன் ஒரு நடிகராக பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசையின் பின்னணியில் அவரிடம் இப்படி ஒரு கதை இருப்பதாக சொன்னவுடன் உடனடியாக நேரம் ஒதுக்கி கதை கேட்டேன். மூன்று மணி நேரத்துக்கும் மேல் கதைக் கேட்டு எனக்கு சிறிதளவும் அயர்ச்சி ஏற்படவில்லை.

அவ்வளவு யதார்த்தம் , அவ்வளவு வேகம். உடனடியாக எப்ப ஆரம்பிக்கலாம் எனக் கேட்டேன்.சிரித்துக் கொண்டே எப்ப வேணும்னாலும் என்று சொன்னவர் தலைப்பு ஓகே வா எனக் கேட்டார். வளர்ந்து வரும் நடிகரான உங்களுக்கு இது எதிர் மறையாக போய் விடுமோ என்று தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் நான் இந்த தலைப்பு தான் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து அவரை ஒப்பு கொள்ள வைத்தேன். இதுவரை எந்த ஒரு ஹீரோவும் இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை என்பதும் எனக்கு உந்துதல் ஆக இருந்தது.நான் நடிகன் ஆக வேண்டும் என முடிவெடுத்த நாளே இமேஜ் வட்டத்துக்குள் சிக்கி விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன்.

படம் பார்க்க வரும் ரசிகர்கள் இரண்டரை மணி நேரம் பொழுதை போக்க வேண்டும் , அவர்கள் மன நிறைவோடு அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்பது மட்டுமே நடிகனாக என்னுடைய இலக்கு.

அந்த வகையில் பிச்சைக்காரன் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.இதில் எனக்கு இணையாக நடித்து இருப்பவர் புது முகம் சட்னா டைட்டஸ் ,என்னுடைய கணக்குப்படி அவருக்கு நிச்சயமாக சினிமாவில் நல்லதொரு எதிர்காலம் உள்ளதாக சொல்லுவேன்.

பிச்சைகாரன் டீசர் வெளிவந்து ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று  படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதை நான் அறிவேன். வெற்றி படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் பொருந்திய பிச்சைக்காரன் நவம்பர் மாதம் வெளிவரும்”,  எனக் கூறினார் விஜய் ஆண்டனி.


Post your comment





Related News
பிச்சைக்காரன் படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை!
பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!
50-வது நாளை கடக்கவிருக்கும் பிச்சைக்காரன்!
50 லட்சம் செலவு செய்து 8 கோடி வசூல் செய்த பிச்சைக்காரன்!
பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி!
போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!
வசூலை குவிக்கும் பிச்சைக்காரன்!
விஜய், அஜித் படங்களுக்கு நிகராக வெளியாகும் பிச்சைக்காரன்!
விஜய் தான் என் முதல் சாய்ஸ் – பிரபல இயக்குனர் அதிரடி!
மீண்டும் ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு எழுந்த புதிய சர்ச்சை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions