பெரிய நடிகருடன் கைகோர்க்கும் பிச்சைக்காரன் இயக்குனர்!

Bookmark and Share

பெரிய நடிகருடன் கைகோர்க்கும் பிச்சைக்காரன் இயக்குனர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கி வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ படம் வசூல் அளவிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் தெலுங்கில் ‘பிச்சக்காடு’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தெலுங்கில் சுமார் 50 நாட்களை தாண்டியும் ஓடி அங்கேயும் வசூல் மழையை வாரிக் குவித்தது.

இந்நிலையில், சசி அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான வெங்கேடஷிடம் ஒரு கதை கூறியதாகவும், அந்த கதையில் நடிக்க வெங்கடேஷ் சம்மதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கிலேயே சசி இயக்கவுள்ளதாக கூறப்படுகிது. 

சசி தெலுங்கில் நேரடியாக இயக்கி கடைசியாக வெளிவந்த படம் ‘சீனு’. 1988-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்திலும் வெங்கடேஷ்தான் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கடேஷ் மூலமாகவே தெலுங்கில் ரீ-என்ட்ரி ஆகவுள்ளார் சசி. ‘சீனு’ படம்தான் தமிழில் லிவிங்ஸ்டன்-கௌசல்யா நடிப்பில் ‘சொல்லாமலே’ என்ற பெயரில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சைத்தான் சென்சார் முடிந்தது – ரிலீஸில் மாற்றம்!
பிச்சைக்காரனுடன் கனக்ஷன் ஆகும் சென்னை 28 பார்ட் 2!
பிச்சைக்காரன் ரீமேக் மூலம் இயக்குனராகும் விஜய் ஆண்டனி!
கன்னடத்தில் வெளியாக இருக்கும் பிச்சைக்காரன்!
பிச்சைக்காரனில் விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை
பிச்சைக்காரனைப்பற்றி வாய்திறக்க மறுக்கும் சசி!
எல்லோருமே ஒவ்வொரு வகையில் பிச்சைக்காரங்கதான்! - விஜய் ஆண்டனி
பொள்ளாச்சியில் பிச்சைக்காரன் படப்பிடிப்பு தொடங்கியது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions