பிச்சைக்காரனில் விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை

Bookmark and Share

பிச்சைக்காரனில் விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை

கீபோர்டுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு, சலீம், இந்தியா பாகிஸ்தான் என இரண்டு படங்களில் நடித்தார்.

இந்த மூன்று படங்களில் நான், சலீம் ஆகிய இரண்டு படங்கள் வர்த்தகரீதியில் வெற்றியடைந்தன. அடுத்து நடித்த இந்தியா பாகிஸ்தான் படம் படு தோல்வியடைந்தது. இந்தியா பாகிஸ்தான் படத்தை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

555 படத்தை தொடர்ந்து சசி இப்படத்தை இயக்கி வருகிறார். எந்த ஹீரோவும் யோசிக்கும் பிச்சைக்காரன் வேடத்தில் இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. நான், சலீம் ஆகிய படங்களை விஜய் ஆண்டனியே தயாரித்தாலும் அப்படங்களின் தயாரிப்பில் வேறு சிலரும் முதலீடு செய்திருந்தனர்.

அதைப்போலவே பிச்சைக்காரன் படத்துக்கும் யாராவது இணை தயாரிப்பாளராக வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் படம் தொடங்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் தோல்வி காரணமாக, இறுதிக்கட்டத்தை நெருங்கும் அளவுக்கு இந்தப் படம் வளர்ந்தநிலையிலும் பார்ட்னராக யாரும் முன்வரவில்லை.

எனவே முழுப்படத்தையும் தானே தயாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டார் விஜய் ஆண்டனி. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கிறது.


Post your comment





Related News
சைத்தான் சென்சார் முடிந்தது – ரிலீஸில் மாற்றம்!
பிச்சைக்காரனுடன் கனக்ஷன் ஆகும் சென்னை 28 பார்ட் 2!
பிச்சைக்காரன் ரீமேக் மூலம் இயக்குனராகும் விஜய் ஆண்டனி!
பெரிய நடிகருடன் கைகோர்க்கும் பிச்சைக்காரன் இயக்குனர்!
கன்னடத்தில் வெளியாக இருக்கும் பிச்சைக்காரன்!
பிச்சைக்காரனைப்பற்றி வாய்திறக்க மறுக்கும் சசி!
எல்லோருமே ஒவ்வொரு வகையில் பிச்சைக்காரங்கதான்! - விஜய் ஆண்டனி
பொள்ளாச்சியில் பிச்சைக்காரன் படப்பிடிப்பு தொடங்கியது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions