பிச்சைக்காரனுடன் கனக்ஷன் ஆகும் சென்னை 28 பார்ட் 2!

Bookmark and Share

பிச்சைக்காரனுடன் கனக்ஷன் ஆகும் சென்னை 28 பார்ட் 2!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஞ்சியிருந்த பேட்ச் பணிகளும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சிட்டி உரிமையை பிரபல கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் மாபெரும் தொகைக் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நிறுவனம்தான் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தையும் வெளியீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இதிலும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் கதை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions