பல மொழிகளில் ரீமேக்காகும் பிச்சைக்காரன்!

Bookmark and Share

பல மொழிகளில் ரீமேக்காகும் பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்துள்ளது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி ஐந்து வாரங்கள் ஆகியும் இன்னும் 75 திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் இது மிகப்பெரிய சாதனையாகும். அதேபோல் தெலுங்கிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விரைவில் இப்படம் மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, போஜ்பூரி, பெங்காலி போன்ற பல மொழிகளில் ரீமேக் ஆக போவதாகவும் இதற்கான உரிமம் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions