மேஜர் ரவி மீது புகார் கொடுத்த 'பிக்கெட்-43' தயாரிப்பாளர்..!

Bookmark and Share

மேஜர் ரவி மீது புகார் கொடுத்த 'பிக்கெட்-43' தயாரிப்பாளர்..!

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல நேற்றுத்தான் மலையாள விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான லிபர்ட்டி பஷீர் 'பிக்கெட்-43' மற்றும் 'பயர்மேன்' ஆகிய இரண்டு படங்களும் ஹிட் படங்கள் அல்ல என பகீர் கிளப்பியதை குறிப்பிட்டிருந்தோம்..

அதன் தொடர்ச்சியாகவோ என்னவோ தற்போது 'பிக்கெட்-43' படத்தின் தயாரிப்பாளர் ஓ.ஜி.சுனில்  என்பவர் மேஜர் ரவி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்க மேஜர் ரவி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான 'பிக்கெட்-43' படம் கிட்டத்தட்ட 50 வது நாளை தொட்டுவிட்டது. அதை வெற்றிப்படம் என்று படக்குழுவினர் ஒருபக்கம் கூறிக்கொண்டிருந்த வேளையில் தான், படம் சரியாக வசூல் பண்ணவில்லை என லிபர்ட்டி பஷீர் சொன்னார்.  

அதன் தொடர்ச்சியாக படத்தின் தயாரிப்பாளர் சுனில், தங்களிடம் சொன்ன பட்ஜெட்டான நான்கு கோடி ரூபாயைவிட, மேஜர் ரவி 7 0 லட்ச ரூபாய் அதிகமாக செலவு வைத்துவிட்டார் என புகார் வாசிக்கிறார்.

ஆனால் படம் வெளியாகி இத்தனை நாள் கழித்து தயாரிப்பாளர் புகார் கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே படக்குழுவினர் சொல்கின்றனர். வெற்றிப்படத்துக்கே இத்தனை சோதனையா..?


Post your comment





Related News
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்
மகேந்திரன் நடிக்கும் பக்கம் நம்பர் 143
இரண்டு மணி நேரத்தில் நடக்கும் 54321
பயர்மேன் ஹிட் இல்லையா...?! கொந்தளிக்கும் தயாரிப்பாளர்!!
\'பிக்கெட்-43\'ஐ இயக்கியது பிருத்விராஜா..? மேஜர் ரவியா..?
\'பிக்கெட்-43\' யின் 33வது நாள் போஸ்டர் ஏற்படுத்திய சர்ச்சை..!
ஒரே நாளில் மம்முட்டி படத்துடன் வெளியாகும் பிருத்விராஜ் படம்..!
தமிழ் படங்கள் தலைப்புக்கு இனி ஏது பஞ்சம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions