'பிக்கெட்-43'ஐ இயக்கியது பிருத்விராஜா..? மேஜர் ரவியா..?

Bookmark and Share

'பிக்கெட்-43'ஐ இயக்கியது பிருத்விராஜா..? மேஜர் ரவியா..?

கடந்த ஜனவரி மாதம் பிருத்விராஜ் நடித்து மேஜர் ரவி இயக்கிய 'பிக்கெட்-43' படம் வெளியானது. வெற்றியும் பெற்றது. ஆனால் நேற்று முன் தினம் தான் 'பிக்கெட்-43' படத்தின் தயாரிப்பாளரான ஓ.ஜி.சுனில், அந்தபடத்தின் இயக்குனரான மேஜர் ரவியின் மீது பட்ஜெட்டுக்கு அதிகமாக 70 லட்சம் ரூபாய் செலவு வைத்துவிட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

அதன் சூடு அடங்குவதற்குள் எப்.எம் ஒன்றில் அளித்த பேட்டியின்போது, “இந்தப்படத்தின் தூண்களாக இருந்து படத்தை வெளிக்கொண்டுவந்தது நாயகன் பிருத்விராஜும் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜானும் தான்.

இந்தப்படத்திற்கு இந்த அளவிற்கு பாராட்டுகள் கிடைத்திருக்கிறது என்றால் அது இந்த இவருக்குத்தான் சேரும். மேஜர் ரவி இந்தப்படத்தில் ஒன்றுமே செய்யவில்லை..” என மீண்டும் பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஆனால் அதே எப்.எம் மூலமாக உடனடியாக இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார் இயக்குனர் மேஜர் ரவி. “சுனில் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நான் இதுவரை மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியுள்ளேன்.. அத்தனையும் ஹிட் படங்கள்..? பின் எதற்காக பிருத்விராஜ், ஜோமோன் இவர்களின் உதவியை டைரக்சனில் நான் நாடவேண்டும்.? கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இப்படி பேசியிருப்பதன் மூலம் சுனிலின் அழுக்கான எண்ணம் தான் வெளிப்பட்டுள்ளது” என பதிலடி கொடுத்துள்ளார் மேஜர் ரவி.

ராணுவ படங்களை இயக்குவதில் மேஜர் ரவி ஸ்பெஷலிஸ்ட் என்பதால் தயாரிப்பாளர் சுனிலின் குற்றச்சாட்டு பொய்யானது என்றே பல திரையுலக பிரமுகர்கள் கருதுகின்றனர்.


Post your comment





Related News
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்
மகேந்திரன் நடிக்கும் பக்கம் நம்பர் 143
இரண்டு மணி நேரத்தில் நடக்கும் 54321
பயர்மேன் ஹிட் இல்லையா...?! கொந்தளிக்கும் தயாரிப்பாளர்!!
மேஜர் ரவி மீது புகார் கொடுத்த \'பிக்கெட்-43\' தயாரிப்பாளர்..!
\'பிக்கெட்-43\' யின் 33வது நாள் போஸ்டர் ஏற்படுத்திய சர்ச்சை..!
ஒரே நாளில் மம்முட்டி படத்துடன் வெளியாகும் பிருத்விராஜ் படம்..!
தமிழ் படங்கள் தலைப்புக்கு இனி ஏது பஞ்சம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions