'பிக்கெட்-43' யின் 33வது நாள் போஸ்டர் ஏற்படுத்திய சர்ச்சை..!

Bookmark and Share

'பிக்கெட்-43' யின் 33வது நாள் போஸ்டர் ஏற்படுத்திய சர்ச்சை..!

நம்ம ஊர்ப்பக்கங்களிலும் சரி, நம்ம ஊர் சினிமாவிலும் சரி.. ஹீரோ எதிரிகளை பார்த்து சவாலாக பேசும் வாக்கியம் தான் “ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா என்ன தொடுடா பாக்கலாம்”.

இது எதிராளியை உசுப்பி விடும் வாக்கியம். மலையாள சினிமாக்களில் ஆக்சன் ஹீரோக்களாக கர்ஜிப்பவர்கள் இதே வாக்கியத்தை 'என்ன நீ தொடனும்னா' நல்ல தந்தைக்கு பிறக்கணும்” என சொல்லுவார்கள்.

எதற்காக இந்த விளக்கம் என்றால் சமீபத்தில் இந்த வாக்கியத்துடன் வெளியான பிருத்விராஜ் படத்தின் போஸ்டர் தான் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது கடந்த மாதம் வெளியான பிருத்விராஜின் 'பிக்கெட்-43' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேஜர் ரவி இயக்கிய இந்தப்படத்தில் நாட்டின் எல்லைப்பகுதியில் காவல் காக்கும் இந்திய-பாகிஸ்தானிய வீரர்களுக்கிடையே ஏற்படும் நட்பை அழகான கவிதையாக படமாக்கியிருந்தார்கள்.

கூடவே ராணுவத்தில் அதிருப்தியுடன் பணிபுரிபவர்களை பற்றியும் லைட்டாக கோடிட்டு காட்டியிருந்தார்கள். தற்போது இந்தப்படத்தின் 33வது நாள் போஸ்டர் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்கள்.

அதில் 'அதிருப்தியில் இருக்கும் ஒவ்வொரு பட்டாளக்காரனின் தந்தைக்கு பிறந்த விஜயம் (வெற்றி)” என்கிற வாசகங்களை குறிப்பிட்டிருந்தார்கள். இப்படி சொன்னதில் கூட பிரச்சனை இல்லை.. ஆனால் போஸ்டர் வடிவமைத்தவர்கள் 33 என்கிற எண்ணின் அருகில் 'தந்தைக்கு பிறந்த' என்கிற வார்த்தை வருவது போல கவனக்குறைவாக டிசைன் செய்துவிட்டார்கள்.

இதைப்பார்த்த அனைவரும் அப்படி என்றால் '33 தந்தைக்கு பிறந்த' என்று ராணுவத்தினரை அவமதிப்பதா என கடும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.. இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்காத 'பிக்கெட்-43' டீம் அதிர்ச்சியாகி, உடனே அந்த போஸ்டரை பதிவிட்ட அனைத்து தளங்களில் இருந்தும் உடனுக்குடன் அகற்றி விட்டார்களாம்.

10, 25, 500வது நாளுக்கு போஸ்டர் அடிப்பாங்க... ஆனா “என்னம்மா இப்டி பண்றீங்க.. 33வது நாளுக்கு என்ன கணக்குலம்மா போஸ்டர் போட்டீங்க” என்றுதான் கேட்க தோன்றுகிறது. 


Post your comment





Related News
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்
மகேந்திரன் நடிக்கும் பக்கம் நம்பர் 143
இரண்டு மணி நேரத்தில் நடக்கும் 54321
பயர்மேன் ஹிட் இல்லையா...?! கொந்தளிக்கும் தயாரிப்பாளர்!!
\'பிக்கெட்-43\'ஐ இயக்கியது பிருத்விராஜா..? மேஜர் ரவியா..?
மேஜர் ரவி மீது புகார் கொடுத்த \'பிக்கெட்-43\' தயாரிப்பாளர்..!
ஒரே நாளில் மம்முட்டி படத்துடன் வெளியாகும் பிருத்விராஜ் படம்..!
தமிழ் படங்கள் தலைப்புக்கு இனி ஏது பஞ்சம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions