மிகவும் எதிர்பார்க்கப்படும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தின் கேப்டன் ஜாக் ஸ்பேரோவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Bookmark and Share

மிகவும் எதிர்பார்க்கப்படும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தின் கேப்டன் ஜாக் ஸ்பேரோவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் “பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படத்தின் கதாநாயகனான கேப்டன் ஜாக் ஸ்பேரோவின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

திரைப்பட ரசிகர்களால் மறக்கமுடியாத கதாபத்திரம், “பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படங்களில் நடித்த கேப்டன் ஜாக் ஸ்பேரோ.  கேப்டன் ஜாக்காக சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டேப். மிகவும் சாதாரண நடிகராக அறியப்பட்ட அவர், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படங்களில் நடித்த பிறகு அழியாப் புகழ் பெற்றுவிட்டார்.

இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் 5-வது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் புகைப்படத்தை அதன் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோவை, இருவர் பெரிய கயிற்றால் கட்டியப்படி இருக்க, அவர் தனது வழக்கமான குறும்பு பார்வையுடன் உள்ளார். இதுவரை வந்துள்ள எல்லா படங்களிலும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட பிறகு தந்திரமாக தப்பிக்கும் காட்சிகள் படு சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கும். அதேபோல் இந்தப்படத்திலும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ எதிரிகளிடமிருந்து தப்பிவிடுவார் என அவரது தீவிர ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள்.

இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது கிடைத்துள்ள தகவலின் படி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions