பிசாசு உடன் மோதும் ஆம்பள... ஆந்திரா மல்லுக்கட்டு

Bookmark and Share

பிசாசு உடன் மோதும் ஆம்பள... ஆந்திரா மல்லுக்கட்டு

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 'ஆம்பள' படத்தின் தெலுங்கு டப்பிங் திரைப்படம் வரும் 27ஆம் தேதி ஆந்திராவில் வெளியாக உள்ளது.  

பல தெலுங்குப்படங்களில் இருந்து சுடப்பட்ட காட்சிகள் ஆம்பள படத்தில் இருப்பதால் தெலுங்கில் வெளியிடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார் விஷால். பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்து இப்படத்தை தெலுங்கில் 'மகாமஹாராஜு' என்ற பெயரில் வெளியிடுகிறார்.

விஷாலின் முந்தைய படமான 'பூஜை' யின் தெலுங்கு டப்பிங்கிற்கு ஆந்திராவில்  ஓரளவு வரவேற்பு கிடைத்தது. எனவே 'ஆம்பள' படத்திற்கும் அதே அளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஷால்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான பேய்ப்படமான 'பிசாசு' படம் தெலுங்கில்  'பிசாச்சி' என்ற பெயரில் இதேநாளில் வெளியாக உள்ளது. பாலாவின் தயாரிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி தமிழில் வெளியானது பிசாசு.

வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இந்த ஹாரர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு படத்திற்கு எதிர்பார்த்ததையும் விட நல்ல வசூலும் கிடைக்க, இப்படத்தின் மற்ற மொழி உரிமைகளை வாங்க ஆர்வமாக பலரும் முன்வந்தனர். பிசாசு டப்பிங் ரைட்ஸுக்கு கிராக்கி இருந்ததால் பெரிய விலைக்கு விற்றிருக்கிறார் பாலா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions