மீண்டும் வருகிறார் பிசாசு பிரயாகா!

Bookmark and Share

மீண்டும் வருகிறார் பிசாசு பிரயாகா!

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய படம் பிசாசு. புதுமுகங்கள் நாகா, பிரயாகா நடித்த இந்த படத்தில் ராதாரவி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் நாயகி என்று ஒப்பந்தம் செய்யப்பட்ட கேரள வரவு பிரயாகா ஓரிரு சீன்களில் மட்டுமே தனது முகத்தை காட்டி நடித்தார்.

மற்றபடி பேயாகவே படம் முழுக்க நடித்தார். அதனால், பிசாசு படம் உருவாகி வந்தபோது மிஷ்கின் படத்தில் நான்தான் நாயகி என்று மார்தட்டி வந்த அவர், படம் வெளியானபோது இரண்டொரு காட்சிகளில் மட்டுமே தனது சொந்த முகம் வெளிப்பட்டதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதோடு அவரை புக் பண்ணயிருந்தவர்களும் பின்னர் கண்டுகொள்ளவில்லை. அதனால் ஏமாற்றத்துடன் கேரளாவுக்கு திரும்பினார் பிரயாகா. இந்தநிலையில், தற்போது விஷ்ணு நடிக்கும் போடா ஆண்டவனே என் பக்கம்தான் என்ற படத்தில் நடிக்கிறார்.

சேட்டை ஆர்.கண்ணன் இயக்கும் இந்த படத்தில் பிரயாகாவுக்கு நல்ல வெயிட்டான வேடம்தான் கொடுத்திருக்கிறாராம் கண்ணன். அதனால் இந்த படத்தில் நடித்தாவது தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பிரயாகா, கேரளாவில் இருந்தபடியே அவ்வப்போது டைரக்டருக்கு போன் போட்டு தனது கேரக்டர் மற்றும் காட்சிகளைப்பற்றி கேட்பவர் அதற்கான ரிகர்சலையும் தொடங்கி விட்டாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions