விஷாலின் தந்தையும் நடிகரானார்...

Bookmark and Share

விஷாலின் தந்தையும் நடிகரானார்...

இயக்குநர் பாலாவின் பி  ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற  படம் - 'பிசாசு'.  இப்படம் தற்போது 'ராக்ஷஸி' என்ற பெயரில் கன்னடத்தில் ரீ-மேக் ஆகிறது.  

அஷ்ரஃப் என்ற புதுமுக இயக்குனர் இந்த படத்தை  இயக்குகிறார். 'எழாம் அறிவு', 'கஜினி' (ஹிந்தி), 'துப்பாக்கி' ஆகிய படங்களில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவராம் இவர். 'ராக்ஷஸி' படத்தில் தமிழில் நாகா நடித்த கதாநாயகன் வேடத்தில் புதுமுகம் நவரசன் நடிக்கிறார்.

பிரயாகா நடித்த பிசாசு கேரக்டரில் சிந்து லோகநாத் நடிக்கிறார். இவர் பிரபல கன்னட நடிகை.  கதாநாயகியின் தந்தையாக ராதாரவி நடித்த கேரக்டரில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நடிக்கிறார்.  

இதற்கு முன் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் ஜி.கே.ரெட்டி. முழுநீள கேரக்டரில் அவர் நடிப்பது இதுதான் முதல் முறை! இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் நடைபெற்றது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐஸ் ஃபேக்டரி போன்ற செட்டில் ஜி.கே.ரெட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது அந்த படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஷால் விசிட் அடித்து, தன் தந்தை நடிப்பதை பார்த்து ரசித்ததுடன் படக்குழுவினரை வாழ்த்தி விட்டு வந்துள்ளார்.

இந்த படத்தை இயக்கி வரும் அஷ்ரஃப் தமிழில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் 'வரைபடம்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions