சல்மான்கான் நடிப்பில் பாலிவூட்டில் ரீமேக் ஆகும் பிதாமகன்

Bookmark and Share

சல்மான்கான் நடிப்பில் பாலிவூட்டில் ரீமேக் ஆகும் பிதாமகன்

பாலா இயக்கத்தில் வெளியாகி, வெற்றியும் விருதுகளையும் குவித்த பிதாமகன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் விக்ரம் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். சூர்யாவின் வேடத்துக்குப் பொருத்தமான நடிகரை தேடி வருகிறார்கள்.

சதீஷ் கவுசிக் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே பாலாவின் சேது படத்தை இந்தியில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 9 ஆண்டுகளுக்கு முன் வந்தது பிதாமகன் படம். தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. விக்ரம், சூர்யா இணைந்து நடித்தனர். விக்ரமுக்கு இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது.

பிதாமகன் ரீமேக் குறித்து சதீஷ் கவுசிக் கூறுகையில், "பிதாமகன்' படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. இந்திக்கேற்ப லேசான மாறுதல்களுடன் இந்தக் கதையை எடுக்கிறேன்.

விக்ரம் கேரக்டருக்கு சல்மான்கான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளேன். சூர்யா வேடத்துக்கு சில நடிகர்களைப் பார்த்து வைத்திருக்கிறோம். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது," என்றார்.


Post your comment





Related News
வாரத்திற்கு 4 படங்கள் ரிலீஸ்... இந்த ஆண்டு 200-ஐ தாண்டும்!
பாலசந்தர் பாணியில் லாரன்ஸ் - ஒரு டிக்கெட்டுல இரண்டு சினிமா!
சுசீந்திரன் படத்தில் வைரமுத்துவும் மகன்களும்
கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு
ஜெயம்ரவியை புகழும் டைரக்டர்கள்!
பாலாவின், \'தாரை தப்பட்டை\' படப்பிடிப்பு துவங்கியது
கத்தி படத்தில் அஜித்தா? ரசிகர்கள் உற்சாகம்!
ஹாலிவூட்டில் இருந்து தமிழுக்கு மீண்டும் வரும் மாதவன்..!
தமிழ்- தெலுங்கு- இந்தி சினிமா புகழின் உச்சியில் சமந்தா..!
\'படையப்பா\' திரைப்பட ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்..!


Latest Gallery






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2014. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions