நெடும் படமாகும் குறும்படம்

Bookmark and Share

நெடும் படமாகும் குறும்படம்

பீட்சா, பண்ணையாரும் பத்மினியும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், முண்டாசுபட்டி போன்றவை குறும்படமாக இருந்து பெரும் படங்களாக மாறியவை அந்த வரிசையில் தற்போது டியூப்ளஸ் என்ற குறும்படம் திரைப்படமாகிறது. கோபிநாத் இயக்குகிறார்.

டியூப்ளக்ஸ் அப்பார்ட்மெண்டில் ஒரு இளம் தம்பதிகள் வசிக்கிறார்கள். அந்த வீட்டில் ஒரு தங்க வளையல் காணாமல் போகிறது. அதோடு அடிக்கடி பொருட்கள் காணாமல் போகிறது. இதனை கண்டுபிடிப்பதற்காக வீட்டில் ஒரு கேமராவை பொருத்துகிறார்கள்.

கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். காரணம் பொருட்களை திருடுவது ஒரு பேய். அது ஏன் திருட வேண்டும். அதனை எப்படி வீட்டிலிருந்து விரட்டினார்கள் என்பதை காமெடி கலந்து திகிலாக சொல்கிறார்கள்.

குறும்படத்தில் மகேஷ், மிசா கோஷல் நடித்திருந்தனர். தற்போது இந்தப் படம் திரைப்படமாகிறது. திரைப்படத்திலும் அவர்களே நடிக்கலாம் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் இயக்குனர் கோபிநாத். பீட்சா, டார்லிங், யாமிருக்க பயமே பாணியில் திகில் காமெடி படமாக இது உருவாக இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions