பிகே பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி விபத்தில் காயம்

Bookmark and Share

பிகே பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி விபத்தில் காயம்

பாலிவுட்டில் வெளிவந்த ‘முன்னபாய் எம்.பி.பி.எஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘பிகே’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் புதிய சாதனைகள் படைத்தது. பாலிவுட்டின் பிரபல இயக்குனர்கள் வரிசையில் ராஜ்குமார் ஹிரானிக்கும் தனி இடம் உண்டு. 

இந்நிலையில் நேற்று, ராஜ்குமார் ஹிரானியின் அலுவலகத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் ஒரு புதிய ராயல் என்பீல்டு பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அவரிடம் ராஜ்குமார் ஹிரானி, அந்த பைக்கை ஓட்டிப் பார்த்து தரும்படி கேட்டுள்ளார். 

அவரும், ராஜ்குமார் ஹிரானிக்கு தனது பைக் சாவியை கொடுத்துள்ளார். மிதமான வேகத்துடன் அந்த பைக்கை செலுத்திய ஹிரானி, ஒருகட்டத்தில் அந்த பைக்கின் எடையை தாங்க முடியாமல், பைக்கோடு கீழே விழுந்தார். 

கீழே விழுந்த ஹிரானிக்கு கழுத்து தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஹிரானிக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு ஹிரானி பூரண நலம் பெறுவார் என மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ராஜ்குமார் ஹிரானி இந்தியில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கைக் குறிப்பை படமாக உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Post your comment





Related News
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
இந்தியாவில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ
சீனாவில் பீகே சாதனையை முறியடித்த பாகுபலி!
ஜப்பானிலும் வெளியாகிறது பிகே.!
பிகே இயக்குநர் படத்தில் நடிக்க விரும்பும் பிரபாஸ்
சீனாவில் வரலாறு படைத்த அமீர் கானின் பி.கே. படம் - ரூ. 100 கோடியை தாண்டியது வசூல்
சீனாவில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்த அமீர்கானின் பி.கே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions