பிகே இயக்குநர் படத்தில் நடிக்க விரும்பும் பிரபாஸ்

Bookmark and Share

பிகே இயக்குநர் படத்தில் நடிக்க விரும்பும் பிரபாஸ்

பாலிவுட்டில் நடிகர் அமீர்கான் நடிப்பில் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த பிகே படம், வசூலில் சக்கை போடு போட்டது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் ராஜ்குமார் ஹிரானி படத்தில் நாயகனாக நடிக்க டோலிவுட் அதிரடி நாயகன் பிரபாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். நடிகர் பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், வெளிவரவிருக்கும் பாகுபலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாகுபலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபாஸ், ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடிக்க விரும்பும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜ்குமார் இயக்கிய முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தையும், 3 இடியட்ஸ் படத்தையும் தான் பல முறை பார்த்து வியந்தாக கூறிய பிரபாஸ் அவரது பிகே படமும் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறியுள்ளார். பாகுபலி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் உலகம் முழுவதும் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
இந்தியாவில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ
சீனாவில் பீகே சாதனையை முறியடித்த பாகுபலி!
பிகே பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி விபத்தில் காயம்
ஜப்பானிலும் வெளியாகிறது பிகே.!
சீனாவில் வரலாறு படைத்த அமீர் கானின் பி.கே. படம் - ரூ. 100 கோடியை தாண்டியது வசூல்
சீனாவில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்த அமீர்கானின் பி.கே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions