ஜப்பானிலும் வெளியாகிறது பிகே.!

Bookmark and Share

ஜப்பானிலும் வெளியாகிறது பிகே.!

தூம்-3 படத்திற்கு பிறகு அமீர்கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த படம் பிகே. படம் வெளியாகும் முன்பே பிகே படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுவே படத்திற்கு ப்ளஸாக அமைய படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.300 கோடி வசூலித்தது. அதுமட்டுமின்றி சமீபத்தில் சீனாவில் வெளியாகி அங்கும் ஹிட்டானது. அதுமட்டுமின்றி இந்திய படம் ஒன்று சீனாவில் ரூ.100 கோடி வசூல் சாதனை புரிந்த படமாக பிகே அமைந்தது.

இந்நிலையில் சீனாவில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து பிகே படத்தை ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜப்பானில் ஏக்தா டைகர், ஓம் சாந்தி ஓம், 3 இடியட்ஸ் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆகையால் இப்போது பிகே., வையும் அங்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். இதனை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும் உறுதி செய்துள்ளார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், டிசம்பர் 19ம் தேதி ஜப்பானில் படம் ரிலீஸாகும் என ராஜ்குமார் ஹிரானி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
இந்தியாவில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ
சீனாவில் பீகே சாதனையை முறியடித்த பாகுபலி!
பிகே பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி விபத்தில் காயம்
பிகே இயக்குநர் படத்தில் நடிக்க விரும்பும் பிரபாஸ்
சீனாவில் வரலாறு படைத்த அமீர் கானின் பி.கே. படம் - ரூ. 100 கோடியை தாண்டியது வசூல்
சீனாவில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்த அமீர்கானின் பி.கே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions