சீனாவில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்த அமீர்கானின் பி.கே

Bookmark and Share

சீனாவில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்த அமீர்கானின் பி.கே

அமீர்கான் வேற்று கிரகவாசியாக நடித்து கடந்த வருடம் வெளிவந்து வசூல் சாதனை படைத்த படம் ‘பி.கே’. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வடஅமெரிக்காவில் இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது. 
அந்த வரிசையில் கடந்த வாரம் பி.கே படம் சீனாவிலும் திரையிடப்பட்டது.

அங்கு 5400 காட்சிகள் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்திய சினிமா அதிக காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது பி.கே படத்திற்குத்தான். அங்கு வெளியான 4 நாட்களிலேயே 7.03 மில்லியன் டாலர்கள் வசூலை ஈட்டியுள்ளது.

அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது. 

அவரது முந்தைய படங்களான 3 இடியட்ஸ், தூம் 3 ஆகிய படங்களும் வெளிநாடுகளில் வெளியாகி பெரிய வசூல் சாதனையை பெற்றவை. அந்த வரிசையில் தற்போது பிகே படமும் வெற்றியடைந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதன்மூலம், வெளிநாடுகளில் அமீர்கானுக்கு ரசிகர்கள் வட்டாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்றே சொல்லலாம். 
பி.கே படத்தில் அமீர்கானுடன், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ராஜ்குமார் ஹிரானி என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். வினோத் சோப்ரா பிலிம்ஸ் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகியவை யு.டி.வி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions