'பி.கே' ரீமேக்கில் கமலுடன் மீண்டும் இணையும் ஜீத்து ஜோசப்..?

Bookmark and Share

'பி.கே' ரீமேக்கில் கமலுடன் மீண்டும் இணையும் ஜீத்து ஜோசப்..?

ஹிட், சூப்பர்ஹிட், மெகா ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட்.. இதுதான் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் ரன் கிராஃப். சுரேஷ்கோபியை வைத்து அவர் இயக்கிய முதல் படம் ஹிட்.. 2010ல் திலீப் நடித்த 'மை பாஸ்' சூப்பர்ஹிட்.

கடந்த 2013ல் துவக்கத்தில் வெளியான பிருத்விராஜின் 'மெமோரிஸ்' மெகா ஹிட் என்றால் அந்த வருட இறுதியில் வெளியான மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' பிளாக் பஸ்டர் ஹிட்.

தொடர்ந்து தற்போது கமலை வைத்து த்ரிஷ்யம் 'ரீமேக்காக பாபநாசம்' படத்தை இயக்கியுள்ளதால் சந்தேகமே இல்லாமல் ஸ்டார் இயக்குனர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார் ஜீத்து ஜோசப்.

ஜீத்துவின் டைரக்சன் ஸ்டைல் கமலுக்கு பிடித்துவிட்டது. கமலின் உலகளாவிய சினிமா ஞானம் ஜீத்துவை கவர்ந்துவிட்டது. அதனாலேயே தற்போது மீண்டும் கமலுடன் இன்னொரு படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறாராம் ஜீத்து ஜோசப்..

அனேகமாக அது சமீபத்தில் இந்தியில் ஆமிர்கான் நடித்து வெற்றிபெற்ற 'பிகே' படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது பாபநாசம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் இறுதிக்கட்ட பணிகளை ஒருபுறமும், திலீப்பை வைத்து தான் இயக்கிவரும் 'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்தின் ஷூட்டிங்கை மறுபுறமும் கவனித்து வருகிறார் ஜீத்து ஜோசப்..


Post your comment





Related News
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
ஜீத்து ஜோசப் டைரக்சனில் நயன்தாரா..!
ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!
“ஜீத்து ஜோசப் காப்பியடிக்கவில்லை” - உயர்நீதிமன்றம் \'பளிச்\' தீர்ப்பு..!
\'பிகே\' தமிழில் ரீமேக் ஆகிறதா? டைரக்டர் பதில்
திலீப்பின் டைமிங் காமெடியால் பலமுறை ரீடேக் வாங்கிய நடிகை..!
நடிகை உதயதாரா திருமணம்:திரையுலக பிரமுகர்கள் பங்கேற்ப்பு
நடிகை உதயதாராவுக்கு மே 16-ம் தேதி திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions