பீகே ரீமேக்கில் நானா...?: கமல் விளக்கம்

Bookmark and Share

பீகே ரீமேக்கில் நானா...?: கமல் விளக்கம்

'பீகே' பட ரீமேக்கில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், சஞ்சய் தத், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பீகே'.

வசூலில் சாதனை புரிந்த இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. பீகே படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க இருப்பதாகவும், பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இப்படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-"இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர்களோடு முதற்கட்ட பேச்சு வார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

என்னுடைய அடுத்தப் படம் எனது சொந்த தயாரிப்பில்தான் இருக்கும்.அதற்காகதான் இப்போது மொரிஷியஸில் தங்கி திட்டமிடும் வேலைகளை செய்துவருகிறேன். யாரோ முடிவாக 'பீகே' ரீமேக் குறித்து கொளுத்திப் போட்டுள்ளனர்.

எனது கோரிக்கைகளுக்கு ஒத்துவந்தால் மட்டுமே அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பது குறித்து யோசிக்க முடியும். இல்லையென்றால் வேறு யாரேனும் அதில் நடிப்பார்கள்.

ஆனால் நிச்சயமாக 'பீகே' மிகவும் நல்ல சுவாரசியமான படம். யார் நடித்தாலும் வெற்றி நிச்சயம். அந்தப் படத்தில் நடிக்க நிறைய நடிகர் போட்டிபோட்டு முன்வருவார்கள்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions