கேரளாவில் போகி கிளைமாக்ஸ்

Bookmark and Share

கேரளாவில் போகி கிளைமாக்ஸ்

த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடித்து வரும் போகி படத்தின் படப்பிடிப்புகள் ஆர்ப்பாட்டமே இல்லாமல் 75 சதவிகிதம் முடிந்து விட்டது. ப்ரியம் படத்தை இயக்கிய பாண்டியன் தனது பெயரை கவின் பாண்டியன் என்று மாற்றி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இது நியாயத்துக்காக போராடும் 3 பெண்களைப் பற்றியது.

அந்த பெண்களாக த்ரிஷா, பூனம் பாஜ்வா, ஓவியா நடிக்கிறார்கள். படத்தில் ஹீரோ கிடையாது. டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் தயாராவதாக கூறப்படுகிறது.

படத்தின் துவக்கத்திலும், கிளைமாக்சிலும் பயங்கர விபத்து காட்சி இடம்பெறுகிறது. இந்த இரண்டு காட்சிகளையும் கேரளாவில் படமாக்க குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான இடத்தை இயக்குனர் கவின் பாண்டியன் பார்த்து திரும்பியுள்ளார்.

அடுத்த வாரம் கிளைமாக்ஸ் படமாக்கப்படுகிறது. இதில் 3 ஹீரோயின்களும் நடிக்க இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் தயாராகிறது. தெலுங்கில் நேமு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions