புத்தாண்டு தினத்தில் தமிழில் வெளியாகும் பாயின்ட் பிரேக்

Bookmark and Share

புத்தாண்டு தினத்தில் தமிழில் வெளியாகும் பாயின்ட் பிரேக்

ஹாலிவுட்டில் தயாராகும் ஆக்‌ஷன் படங்களுக்கு, நம் நாட்டில் எப்போதுமே தனியொரு வரவேற்பு உண்டு. இப்படங்கள், மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் போது, வரவேற்பு இரண்டு மடங்காகும்.

பிவிஆர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பாயின்ட் பிரேக்’ என்ற ஆங்கில படம் தமிழில் அதே தலைப்புடன் 'அச்சம் தாண்டி சிகரம் தொடு' என்கிற பின்குறிப்புடன் வெளியாக உள்ளது.

கீனு ரீவ்ஸ் மற்றும் பேட்ரிக் ஸ்வாய்ஸ் நடித்து 1991-இல் வெளிவந்த ‘பாயின்ட் பிரேக்’ படத்தின் புதிய, மாறுதல்கள் கொண்ட மறு அவதாரம் இப்படம். திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் மேலும் மெருகு சேர்த்துள்ளார்கள். படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார் எரிக்சன் கோர்.

பனிமலையில் சறுக்கி ஓடுதல், மலை ஏறுதல், தக்க உபகரணங்கள் துணை கொண்டு விண்ணில் பறந்து செல்லுதல், நீண்ட தூரம் சைக்கிளில் செல்லுதல் ஆகிய வீர விளையாட்டுகளில் ஈடுபடும் ஒரு சிலர், திருட்டு தொழிலில் ஈடுபடுவது பற்றி எப்.பி.ஐ நிறுவனத்திற்கு தெரியவருகிறது. 

இளம் எப்.பி.ஐ அதிகாரியான ஜானி உட்டா இது பற்றி புலனாய்வு செய்வதற்கு தேர்வு செய்யப்படுகிறார்.

இந்த விளையாட்டு வீரர்களின் லீலைகளை பற்றி துப்பு துலக்க களத்தில் இறங்குகிறார் ஜானி. படத்தில் இடம்பெறும் வீர விளையாட்டு தொடர்பான காட்சிகளில், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணர்களும் நடித்துள்ளனர்.

இப்படம் ஆங்கிலம் மற்றும் தமிழில் புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions