போக்கிரி ராஜா தள்ளிப்போனது ஏன்?

Bookmark and Share

போக்கிரி ராஜா தள்ளிப்போனது ஏன்?

ஜீவா, சிபி சத்யராஜ், ஹன்சிகாவை வைத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் படம் போக்கிரி ராஜா.

டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று கோவையில் நடைபெற்றது.  பி.டி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் தயரித்துள்ள போக்கிரி ராஜா படம்  இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்டது.

இப்போது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.அதாவது போக்கிரி ராஜா படத்தை ஒரு வாரம் தள்ளி மார்ச் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். இந்த தகவலை போக்கிரி ராஜா படக்குழுவினரரே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.  

இந்த தள்ளி வைப்புக்கு என்ன காரணம்? பிப்ரவரி 26 அன்று கலைப்புலி தாணுவின் கணிதன் படமும், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள ஆறாது சினம் படமும் வெளியாக உள்ளன.

இந்தபடங்களுக்கு அதிக தியேட்டர் கிடைத்துள்ளது, போக்கிரி ராஜா படத்திற்கு குறைந்த அளவிலேயே தியேட்டர்கள் கிடைத்திருப்பதால் படம் தள்ளிப்போய் இருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Post your comment





Related News
'புலி' யால் போக்கிரி ராஜாவுக்கு இழுபறி!
ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களிடம் படத்தை திரையிட்ட போக்கிரி ராஜா படக்குழு!
போக்கிரி ராஜாவில் கட்டப்பா நான்தான்- சிபி
குழந்தைகளை கவரும் போக்கிரி ராஜா!
துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி,புடவை வழங்கிய போக்கிரி ராஜா படக்குழுவினர்!
போக்கிரி ராஜா உருவான தருணங்கள்
நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என நிறுபித்த ஜீவா, சிபிராஜ்!
ஜீவா படத்துக்கு போக்கிரி ராஜா பெயர் சூட்ட ரஜினி அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions