போக்கிரி ராஜாவில் கட்டப்பா நான்தான்- சிபி

Bookmark and Share

போக்கிரி ராஜாவில் கட்டப்பா நான்தான்- சிபி

ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடிக்கும் போக்கிரிராஜா படத்தை புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார்.

மார்ச் 4ந் தேதி வெளிவருகிறது. இமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் கோவையில் நடந்தது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

ஆர்யா வெளியிட்டார்.நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர்கள் பி.மதன், காஸ்மோ சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிபிராஜ் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: பாகுபலி படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்திருந்தபோதும் அவர்களுக்கு நிகராக கட்டப்பா கேரக்டரும் பேசப்பட்டது. அது மாதிரி போக்கிரி ராஜாவில், நீ தான் கட்டப்பா அந்த அளவிற்கு உன் கேரக்டருக்கு முக்கியத்தும் இருக்கும் என்று தான் ஜீவா என்னை நடிக்க அழைத்தார்.

அந்த அளவிற்கு என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்தும் இருக்கிறது. தன் சீன்களை விட்டுக்கொடுத்து எனக்கு நிறைய வாய்ப்பளித்தார். அதற்கு பெரிய மனசு வேண்டும். அது ஜீவாவிடம் இருக்கிறது. என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions