போக்கிரி ஸ்டைலில் களமிறங்கும் சந்தானம்

Bookmark and Share

போக்கிரி ஸ்டைலில் களமிறங்கும் சந்தானம்

காமெடியனாக இருந்து ஹீரோவாக களமிறங்கியுள்ள சந்தானம் கைவசம் தற்போது ‘சர்வர் சுந்தரம்’, ‘ ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்க போடு போடு ராஜா‘ ‘மன்னவன் வந்தானடி’  ஆகிய படங்கள் உள்ளன. இதில், ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதுவும் போக்கிரி ஸ்டைலில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

அதாவது ‘போக்கிரி’ படத்தில் விஜய், முதலில் போக்கிரியாக இருந்து ஒவ்வொரு ரவுடிகளிடம் சகஜமாக பழகி, கடைசியில் மெயின் வில்லனை பிடிப்பார். அதேபோல், இந்த படத்தில் சந்தானம், முதலில் தான் போலீஸ் என்பதை காட்டிக் கொள்ளாமல், ரவுடிகளை கடைசியில் எப்படி வீழ்த்துகிறார் என்பதுபோல் கதையை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ‘அனேகன்’ படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். வாசன் விசுவல் வென்சுவர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 


Post your comment





Related News
விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!
போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு
போக்கிரி ராஜா, பிச்சைக்காரன் படங்களின் வசூல் விவரம் வெளிவந்தது!
400 தியேட்டர்களில் வெளியாகும் போக்கிரி ராஜா!
சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் போக்கிரி ராஜா!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற போக்கிரி ராஜா!
புலி பாணியில் உருவாகியிருக்கும் போக்கிரி ராஜா!
காதலர் தினத்தில் போக்கிரி ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions