காதலர் தினத்தில் போக்கிரி ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு

Bookmark and Share

காதலர் தினத்தில் போக்கிரி ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு

ஜீவா - சிபிராஜ்- ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘போக்கிரி ராஜா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 

ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

'போக்கிரி ராஜா' படத்தை பி.டி.செல்வகுமார் பிரம்மாண்டமாக தயாரித்தள்ளார். காஸ்மோ வில்லேஜ் நிறுவனம் சார்பில் சிவா இப்படத்தை வெளியிடுகிறார். பிப்ரவரி 26-ந் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions