நடிகர் கருணாஸ் பரமக்குடி செல்ல தடை விதித்த போலீஸ்!

Bookmark and Share

நடிகர் கருணாஸ் பரமக்குடி செல்ல தடை விதித்த போலீஸ்!

காமெடி, கதாநாயகனென  இரண்டு வேடங்களிலும் கலக்கி வரும் நடிகர் கருணாஸ் அரசியல் கட்சியுடன் இணைந்து சமூக பாணியாற்றி வருபவர். இவர்  படுகொலை செய்யப்பட்ட வீரமணி, மலைக் கண்ணன், சிவக்குமார் ஆகியோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் கருணாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்.

அதாவது தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய வீரமணி, மலைக் கண்ணன், சிவக்குமார் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கருணாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் அங்கு செல்ல வேண்டாம் என கூறி நடிகர் கருணாஸை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நடிகர் கருணாஸ் மதுரையில் நடந்த வக்கீல்கள் மறியலில் கலந்து கொண்டார். நடிகர் கருணாஸ் இது தொடர்பாக கூறும்போது, பரமக்குடியில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் கவலையை அளிக்கிறது. போலீசார் இரும்பு கரம் கொண்டு வன்முறையை அடக்க வேண்டும். கொலைகாரர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Post your comment

Related News
21 குண்டுகள் முழங்க நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions