குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க கற்றுக்கொடுத்தவர் விசு: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்

Bookmark and Share

குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க கற்றுக்கொடுத்தவர் விசு: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்

இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் விசு. இவர் ‘மணல் கயிறு’, ‘சிதம்பர ரகசியம்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். விசுவின் ஆதரவோடு அவரது குடும்பத்தினர் ‘விசுமா’ என்ற வெப் டிவி ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் இயக்குனர் முத்துராமன், இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் கவிஞர் பிறைசூடன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘சினிமாக்காரர்கள் என்றால் போலியான வாழ்க்கை என்றெல்லாம் பெயர் இருக்கிறது. ஆனால், சினிமாக்காரர்களில் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படி நல்ல மனிதர்களில் முக்கியமானவர் விசு. வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சனை இருக்கிறது.

முக்கியமாக குடும்பத்தில் அனைவருக்கும் பிரச்சனை இருக்கிறது. குடும்ப பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று திரைப்படம் மூலம் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் விசு. இவருடைய படங்களில் பல நல்ல விஷயங்கள், கருத்துக்கள் இருக்கும். இவர் தொடங்கியுள்ள ‘விசுமா’ வெப் டி.வி. சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்’ என்றார்.

டி.பி.கஜேந்திரன் பேசும்போது, ‘விசு என்னுடைய குருநாதர். அவர் இந்தியாவின் சொத்து’ என்று பேசினார். மேலும் விழாவிற்கு வந்த அனைவரும் விசுவின் படங்கள் பற்றியும் ‘விசுமா’ வெப் டி.வியை பற்றியும் புகழ்ந்து பேசினார்கள்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions