பொங்கல் அன்று ரிலீஸாகும் படங்கள்!

Bookmark and Share

பொங்கல் அன்று ரிலீஸாகும் படங்கள்!

சுந்தர்.சி தற்போது அரண்மனை-2 என்ற இரண்டாவது பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா ஆகிறோர் நடித்திருக்கின்றனர். 

இப்படத்திற்கு ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக வரும் பொங்களுக்கு வெளியாகிறது என குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்திருக்கும் படம் கதகளி. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேத்தரினா தெரிசா நடிக்கிறார். ஆம்பள படத்தின் வெற்றி பிறகு ஹிப் ஹோப் தமிழா இப்படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாலா இயக்கத்தில் சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடித்து வரும் படம் தாரை தப்பட்டை. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படமும் அடுத்த வருடம் பொங்களுக்கு வெளியாகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ் படத்தை அடுத்து சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் 24. இபடத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்குகிறார். சூர்யா தனது சொந்த 2டி நிறுவனம் மூலம் இபடத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் போஸ்ட் புரோடக்சன் வேலைகள் மும்பரமாக நடந்து வருகிறது. இப்படம் எப்படியும் பொங்களுக்கு வெளியாகும் என நெருங்கிய வட்டராங்களில் பேசப்படுகிறது.
எனவே இந்த பொங்களுக்கு நான்கு பெரிய படங்கள் ஒன்றாக வெளியாகுவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்…!


Post your comment





Related News
50 வருடங்களுக்கும் மேலாக பொங்கல் சீர் கொடுக்கும் ஒரு நடிகர்: யாருக்கு?
இதுவரை வராத கதைக்களம் தான் பைரவா - வெளியான தகவல்
பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் 5 காட்சிகள்: தமிழக அரசு அனுமதி
பொங்கல் ரேஸில் விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்..!
\\\'வீரம்\\\' படத்தால் வேஷ்டிகளுக்கு நல்ல மவுசு..!
பொங்கல் விடுமுறைக்கு கூடுதல் காட்சிகளுக்கு அரசு அனுமதி..!
கின்னஸ் ‘பக்ரு’ வாழ்க்கை கதை படம் பொங்கல் அன்று ரிலீசாகிறது..!
ரஜினி விலகியதால் அஜீத்,விஜயுடன் களம் இறங்கும் வடிவேலு..!
ரஜினியுடன் மோதும் மகேஷ்பாபு..!
பொங்கலுக்கு களமிறங்கும் அஜீத்தின் ‘வீரம்’-அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions