பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் 5 காட்சிகள்: தமிழக அரசு அனுமதி

Bookmark and Share

 பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் 5 காட்சிகள்: தமிழக அரசு அனுமதி

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18-1-2016, 19-1-2016 20-1-2016, 21-1-2016 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது, 5-வது காட்சி நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களான 15-1-2016, 16-1-2016, 17-1-2016 ஆகிய தேதிகள் ஏற்கனவே உள்ள அரசு உத்தரவுப்படி அன்றைய தேதிகளிலும் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சி) காலை 9 மணிக்கு நடத்திக்கொள்ளலாம்.

அதுபோல், நடமாடும் திரையரங்குகள் 15-1-2016, 16-1-2016, 17-1-2016 ஆகிய தேதிகளில் காலை காட்சிகள் 9 மணிக்கும், 18-1-2016, 19-1-2016, 20-1-2016, 21-1-2016 ஆகிய தேதிகளில் மேட்னி காட்சியாக மதியம் 2.30 மணிக்கு நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions