50 வருடங்களுக்கும் மேலாக பொங்கல் சீர் கொடுக்கும் ஒரு நடிகர்: யாருக்கு?

Bookmark and Share

50 வருடங்களுக்கும் மேலாக பொங்கல் சீர் கொடுக்கும் ஒரு நடிகர்: யாருக்கு?

நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பின் படமான பராசக்தி மூலம் சிவாஜி கணே சனை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் பெருமாள்முதலியார்.

கலைஞர் கருணாநிதி எழுத்தோவியத்தில் வெளி வந்து தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய படம் அது.

வேலூர் நேஷனல் திரையரங்கின் உரிமையாளரான இவரது வீட்டுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் சிவாஜி கணேசன், அவரது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்று செல்வது வழக்கம்..!

நடிகர் திலகம் மறைந்த பின்னும் பிரபு குடும்பத்தோடு செல்வதை வழக்காமாக்கினார்

இந்த ஆண்டும்     பொங்கலையொட்டி, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதா, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் காட்பாடி காந்திநகர் கிழக்கு பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு வந்தனர்.

அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையை பெற்று கொண்ட மீனாட்சியம்மாள் அவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி ஆசி அளித்தார்.

அவர்கள் வீட்டில் சிறிது நேரம் தங்கி காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பிரபு குடும்பத்தினர் புறப்பட்டு சென்றனர்.

நடிகர் சிவாஜி, பெருமாள் முதலி யார் இருவரும் இவர்களை விட்டு பிரிந்துசென்ற பின்னரும் இரு குடும்பத்தினரின் நட்பும் இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருவது நட்பின் அடையாளத்தை காட்டுகிறது.

நன்றி, விசுவாசம் என்பதற்கு நடிகர் திலகம் குடும்பமே உதாரணமாக திகழ்கிறது.


Post your comment





Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
சிவாஜியின் கடைசி ஆசை, நிறைவேறாமலேயே போனது- எத்தனை பேருக்கு தெரியும்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions